கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மோசடி வழக்கில் அதிகாரி கைது போலீஸ் பதிலளிக்க உத்தரவு

Added : டிச 17, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:மோசடி வழக்கில் கைதான, போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரின் ஜாமின் மனுவுக்கு, மத்திய குற்றப்பிரிவு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த, 2011 - 15ல், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. இவரது பெயரை கூறி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, போலீஸ் கமிஷனரிடம் புகார்

சென்னை:மோசடி வழக்கில் கைதான, போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனரின் ஜாமின் மனுவுக்கு, மத்திய குற்றப்பிரிவு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த, 2011 - 15ல், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர், செந்தில் பாலாஜி. இவரது பெயரை கூறி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து, செந்தில் பாலாஜி உள்ளிட்ட நால்வருக்கு எதிராக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கணேசன், நவம்பர், 11ல், கைது செய்யப்பட்டார்.ஜாமீன் வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில், கணேசன் மனு தாக்கல் செய்தார். இம்மனு, நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. போலீஸ் தரப்பில் ஆஜரான, தலைமை குற்றவியல் வழக்கறிஞர், 'வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கிய குற்றச்சாட்டு மட்டுமின்றி, சட்ட விரோதமாக, நியமன உத்தரவுகளையும் வழங்கியுள்ளார். பணம் கொடுத்த அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்றார்.

மனுதாரர் சார்பில், 'முதலில் அளிக்கபட்ட புகாரில், கணேசனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தற்போது, புகாரை புதுப்பிக்க முடியாது' என, கூறப்பட்டது. இதையடுத்து, ஜாமீன் மனுவுக்கு விளக்கம் அளிக்க, மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 23ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.'பணம் பெறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல, பணம் கொடுத்து, குற்றத்திற்கு துணை போவோரையும் விசாரிக்க வேண்டும். 'அவர்களை அப்பாவிகள் என்று சொல்லக்கூடாது' என, நீதிபதி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-டிச-202018:16:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN செந்திலுக்கு செக் போனதோ கொடுத்தவனையும் பெற்றவனையும் உடந்தையாக செயல்பட்டவனையும் விடவே கூடாது பிடித்து வாழ்நாள் பூரா கம்பி எண்ண வைக்கனும்.அதுதான் சரியான தீர்வு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X