சென்னை:வேலை வாங்கி தருவதாக, 97 லட்சம் ரூபாய் மோசடி செய்த, சென்னை துறைமுக அதிகாரி மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை, வியாசர்பாடியை சேர்ந்தவர் தேவராஜ், 63. ஓய்வுபெற்ற பெட்ரோல் நிறுவன அதிகாரியான இவர், நுங்கம்பாக்கம், சி.பி.ஐ., அலுவலகத்தில் அளித்துள்ள புகார்:
ரயில் பயணத்தில், சென்னை, சைதாப்பேட்டை, சின்னமலையைச் சேர்ந்த பூபதி என்பவர் அறிமுகமானார். சென்னை துறைமுகத்தில், முதன்மை பொறியாளரின் உதவியாளராக பணிபுரிந்து வருவதாக கூறினார்.'மெக்கானிக்கல் இன்ஜினியரிங் அண்ட் ஷிப்பிங் லாஜிஸ்டிக்ஸ்' டிப்ளமா படிப்பை முடிந்துள்ள, என் மகன் சத்யபிரகாஷுக்கு, சென்னை துறைமுகத்தில், போக்குவரத்து உதவி மேலாளர் பணி வாங்கி தருவதாக கூறினார்.
இதற்கு, 1 கோடி ரூபாய் கேட்ட அவர், பல தவணைகளில், வங்கி காசோலை மற்றும் ரொக்கமாக, 97 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்து விட்டார். அவரிடம் இருந்து பணத்தை, நான் திரும்ப பெற்று விட்டதாக, மர்ம நபர்கள் எழுதி வாங்கினர்; கொலை மிரட்டலும் விடுத்தனர்.
இதுபற்றி, சென்னை துறைமுக 'விஜிலென்ஸ்' அதிகாரியிடம் புகார் அளித்தேன்; உடன், பூபதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். பூபதி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து, பூபதி மீது வழக்குப்பதிவு செய்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE