கோர்ட் செய்தி

தமிழ்நாடு

எம்.பி.,- எம்.எல்.ஏ., வழக்குகளுக்கு தடை

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை:காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., வேட்பாளர்களின் முடிவை விரைந்து அறிவிக்க கோரி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி,காங்., எம்.பி., ஜோதிமணி தலைமையில், ஜன., 3ல், சாலை மறியல் போராட்டம் நடந்தது.இதையடுத்து,

சென்னை:காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, தி.மு.க., வேட்பாளர்களின் முடிவை விரைந்து அறிவிக்க கோரி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி,காங்., எம்.பி., ஜோதிமணி தலைமையில், ஜன., 3ல், சாலை மறியல் போராட்டம் நடந்தது.இதையடுத்து, அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜி, ஜோதிமணி இருவரும், மனுக்கள் தாக்கல் செய்தனர்.இம்மனுக்கள், நீதிபதி சதீஷ்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி, போலீஸ் தரப்பிற்கு உத்தரவிட்டு, விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, ஜன., 18க்கு தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X