திருச்சி:தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், திடீர் உடல் நலக்குறைவால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன், சட்டசபை பொதுக் கணக்கு குழு தலைவராகவும் உள்ளார். திருச்சியில் நடந்த பொதுக் கணக்கு குழு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, விமானத்தில், நேற்று முன்தினம், திருச்சி வந்தார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பின், திண்டுக்கல்லில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்கு சென்றார். கூட்டம் முடிந்து, நேற்று மாலை, சென்னை செல்வதற்காக, திருச்சிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது, அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான காய்ச்சலுடன், தலை சுற்றல், மூச்சு திணறலும் ஏற்பட்டதால், உடனடி சிகிச்சை பெற்ற அவர், இரவு, 7:15 மணிக்கு, ஆம்புலன்சில் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். நள்ளிரவு சென்னை வந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE