பொது செய்தி

தமிழ்நாடு

கோவை பள்ளி மாணவர்கள் அபாரம்! தேசிய கலை போட்டிகளில் பங்கேற்க தேர்வு

Added : டிச 17, 2020
Share
Advertisement
கோவை:மாநில அளவில் இணைய வழியில் நடந்த கலாஉத்சவ் போட்டிகளில், முதலிடம் பிடித்த, மூன்று மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ஆண்டுதோறும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.நடப்பாண்டில்

கோவை:மாநில அளவில் இணைய வழியில் நடந்த கலாஉத்சவ் போட்டிகளில், முதலிடம் பிடித்த, மூன்று மாணவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் சார்பில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணரும் வகையில், ஆண்டுதோறும், மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கலா உத்சவ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.நடப்பாண்டில் தொற்று பரவுவதன் காரணமாக, பள்ளிகள் திறக்கப்படாததால், இணையவழியில் போட்டிகள் நடத்தப்பட்டன. மாநில அளவிலான இப்போட்டி, கடந்த 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை, அந்தந்த மாவட்ட கல்வித்தொலைக்காட்சி ஒருங்கிணைப்பு மையத்தில் நடத்தப்பட்டது.மொத்தம் ஒன்பது வகையான போட்டிகள், மாணவ, மாணவியருக்கு பிரத்யேகமாக நடத்தப்பட்டன. இதில், மணற்சிற்பத்தில், கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 1 மாணவி கிருத்திகா, முதலிடம் பிடித்துள்ளார்.பாரம்பரிய நாட்டுப்புற வாய்ப்பாட்டு இசையில், மாணவர் பிரிவில், ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளி, பிளஸ் 2 மாணவர் யஷ்வந்த் மற்றும் கருவி இசை பிரிவில் ஒண்டிப்புதுார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவி தனுஷ்யா ஆகியோர் முதலிடம் பிடித்துள்ளனர்.இவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க, தகுதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின், கோவை பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X