கோவை:மூலப்பொருட்கள் விலை உயர்வை கண்டித்து, 400 பவுண்டரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கின்றன. இது சார்ந்த தொழில் நிறுவனங்களும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டத்தில், 400க்கும் மேற்பட்ட பவுண்டரிகள் உள்ளன. வார்ப்பட தொழிலை சார்ந்து வெட் கிரைண்டர், இன்ஜினியரிங், ஆட்டோமொபைல் போன்ற தொழில்கள் நடக்கின்றன.காஸ்டிங் மெட்டீரியல்களை பவுண்டரிகளில் இருந்து வாங்கி, குறு, சிறு தொழில் நிறுவனங்களில் உற்பத்திக்கு பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பவுண்டரி தொழிலுக்கு தேவைப்படும் மூலப்பொருட்களின் விலை, 26 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதால், பவுண்டரி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
விலையேற்றத்தை குறைக்கக்கோரி, பவுண்டரிகள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், பவுண்டரி சார்ந்த பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தங்களுக்கு பவுண்டரி மெட்டீரியல் கிடைக்காமல் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோவை மாவட்ட சிறு, குறு பவுண்டரிகள் அதிபர்கள் சங்க தலைவர் சிவசண்முககுமார் கூறியதாவது: 400 யூனிட்டுகள் மூடப்பட்டுள்ளன. மத்திய, மாநில அரசுக்கு எங்கள் கோரிக்கையை அனுப்பி வைத்து இருக்கிறோம். கலெக்டரிடமும் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, இந்த விலை ஏற்றத்துக்கு காரணம் தெரியவில்லை என்று, சொல்லி இருக்கிறார்.நான் விசாரித்த வரையில், மூலப்பொருட்களில் விலை ஏற்றம் இல்லை என்றுதான் தெரிகிறது. ஆனால் எங்களுக்கு, 30 சதவீதம் உயர்த்தி கொடுக்கின்றனர். விலை குறையும் வரை, பவுண்டரிகள் வேலை நிறுத்தம் தொடரும்.இவ்வாறு, அவர் கூறினார்.
பவுண்டரிகள் வேலை நிறுத்தத்தால், ஒட்டுமொத்த கோவை சிறுதொழில்களும் ஸ்தம்பித்து நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும் என்பதே, பவுண்டரி உரிமையாளர்களின் கோரிக்கை.விலையேற்றத்தை குறைக்கக்கோரி, பவுண்டரிகள், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த வேலை நிறுத்தத்துக்கு சிறு, குறு தொழில் நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE