அவிநாசி:திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், அனுமதியின்றி பெறப்பட்ட குடிநீர் இணைப்புகளை, பேரூராட்சி வசம் கணக்கு காண்பிக்க, வரும், 21ம் தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.திருமுருகன்பூண்டி பேரூராட்சியில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 'இப்பகுதியில், அனுமதியின்றி, முறைகேடாக ஏராளமான குடிநீர் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன' என்ற, குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.இதற்கு தீர்வு காண, அனுமதியற்ற மற்றும் முறைகேடாக பெறப்பட்டுள்ள இணைப்பு குறித்து கணக்கெடுக்க, குழு அமைக்கப்பட்டது. சுற்றியுள்ள பேரூராட்சி அலுவலர்களை உள்ளடக்கிய இக்குழுவினர் கள ஆய்வு மூலம், அனுமதியற்ற குடிநீர் இணைப்பு குறித்த விவரங்களை சேகரித்தனர்.பேரூராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:பேரூராட்சியின் அனுமதியின்றி, டேவணி கட்டணம், சென்டேஜ் கட்டணம் மற்றும் சாலை துண்டிப்பு கட்டணம் செலுத்தாமல், தன்னிச்சையாக தனியார் குடிநீர் குழாய் இணைப்பு பெற்றிருந்தால், தாமாகவே முன்வந்து, பேரூராட்சி அலுவலகத்தில், வரும், 21ம் தேதிக்குள், சொத்து வரி ரசீது செலுத்தி, விண்ணப்பத்துடன் உரிய கட்டணம் செலுத்தி, குடிநீர் இணைப்பை முறைப்படுத்தி கொள்ள வேண்டும்.தவறும்பட்சத்தில், அரசு விதிப்படி, போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE