திருப்பூர், மங்கலம் ரோடு, பாரப்பாளையத்தில் சந்திப்பு ரோடுகள் அதிகம் உள்ளன. வாகன ஓட்டிகள் அதிவேகமாக சென்று வருகின்றனர். விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வேகத்தடை அமைக்க வேண்டும்.- கலைச்செழியன், எஸ்.ஆர்., நகர்.பொதுமக்கள் அவதிஅவிநாசி, சிவசக்தி நகரில் வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் குளம்போல் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதோடு, பொதுமக்கள் அவ்வழியாக செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.- பிரபுகுமார், அவிநாசி.போக்குவரத்து நெரிசல்திருப்பூர் மாநகராட்சி சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் உட்பட நகரின் போக்குவரத்து மிகுந்த பகுதிகளில், போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி வழங்க கூடாது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.- ராஜா, ஓடக்காடு.ரோடு படுமோசம்திருப்பூர், கே.செட்டிபாளையம் வசந்தம் நகரில், குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழி, பல மாதங்களாக இன்னும் மூடப்படவில்லை. பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.- அஸ்வந்த், வசந்தம் நகர்.குடிமகன்கள் அட்டகாசம்பலவஞ்சிபாளையம் நால் ரோடு பகுதியில், 'குடி'மகன்கள் ரோட்டோரம் அமர்ந்து மது அருந்தி, போதையில் தகராறு செய்து, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.- கணேஷ், பலவஞ்சிபாளையம்.தெருவிளக்கு எரியவில்லைதிருப்பூர் - தாராபுரம் ரோட்டில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை எதிரில், தெருவிளக்கு எரிவதில்லை. மருந்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகள், பஸ் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.- டி.முத்துக்குமரன்,திருப்பூர்.கழிவுநீர் தேங்கி பாதிப்புதிருப்பூர், போயம்பாளையம், கங்காநகரில், சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல், கழிவுநீர் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது; துர்நாற்றம் வீசுகிறது.- பி.வளர்மதி,போயம்பாளையம்.குடிநீர் குழாய் உடைப்புஅருள்புரம், எம்.ஜி.ஆர்., நகர், சேனாம்பாளையம் பகுதியில், குழாய் உடைத்து, குடிநீர் வீணாக, ரோட்டில் செல்கிறது. வீட்டு இணைப்புகளுக்கு போதிய அளவு குடிநீர் வினியோகிப்பது இல்லை.- கே.பஷீர் அலி,சேனாம்பாளையம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE