அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஆமை வேகத்தில் வளர்ச்சி பணி: தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:மங்கலம் ரோட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தி, தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மங்கலம் ரோட்டில் பாதாள சாக்கடை, 4வது குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு குழாய் பதிக்கும் பணி கடந்த பல மாதமாக நடந்து வருகிறது. இதற்காக பெரியாண்டிபாளையம் பிரிவு முதல் ஆண்டிபாளையம்
 ஆமை வேகத்தில் வளர்ச்சி பணி:  தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:மங்கலம் ரோட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை விரைவுப்படுத்த வலியுறுத்தி, தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் மாநகராட்சி சார்பில், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ், மங்கலம் ரோட்டில் பாதாள சாக்கடை, 4வது குடிநீர் திட்டம் ஆகியவற்றுக்கு குழாய் பதிக்கும் பணி கடந்த பல மாதமாக நடந்து வருகிறது. இதற்காக பெரியாண்டிபாளையம் பிரிவு முதல் ஆண்டிபாளையம் குளம் வரையிலான ரோடு முற்றிலும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.இதனால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. இப்பணி மிகவும் ஆமைவேகத்தில் நடப்பதால், பணியை விரைந்து முடித்து ரோட்டை சீரமைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.இதனை வலியுறுத்தியும், மந்த கதியில் பணி மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், குளத்துக்கடை பஸ் ஸ்டாப்பில் நேற்று தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் சாமிநாதன், பத்மநாபன் முன்னிலை வகித்தனர்.வீரபாண்டி பகுதி நிர்வாகிகள், கட்சியினர், பொதுமக்கள் பங்கேற்றனர். கோரிக்கையை வலியுறுத்தி இதில் பங்கேற்றவர்கள் கோஷமிட்டனர். அப்பகுதியில் தோண்டி கிடக்கும் ரோட்டில் தேங்கி நின்ற மழை நீர் மற்றும் சேற்றில் செடி நட்டு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X