திருப்பூர்:திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் திறப்பு விழா நாளை நடைபெறவுள்ளது. காணொலி வாயிலாக விழா நடக்கும் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது.திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. 35 கோடி ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டும் பணி கடந்த 3 ஆண்டாக நடந்து வந்தது.தற்போது கட்டுமான பணியும், உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளது. பயன்பாட்டில் உள்ள கோர்ட் வளாகத்தில் இருந்து தளவாடங்கள் கடந்த வாரம் சேர்க்கப்பட்டன.திருப்பூர் மாவட்ட நீதித்துறை பொறுப்பு நீதிபதி வைத்தியநாதன், மாவட்ட நீதிபதி அல்லி ஆகியோர் கட்டுமான பணி நிறைவடைந்தது குறித்து அறிக்கை சமர்ப்பித்த நிலையில், இதன் திறப்பு விழா நாளை நடைபெறுகிறது.சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, மாநில சட்டப்பணிகள் குழு தலைவர் வினீத் கோத்தாரி ஆகியோர் காணொலி மூலம் திறந்து வைக்கவுள்ளனர். காலை, 11:00 மணிக்கு திறப்பு விழா நடைபெறுகிறது.புதிய வளாக திறப்பு விழா முன்னர், தாராபுரம் ரோடு தனியார் திருமண மண்டபத்தில் நடக்கவிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இது தற்போதைய புதிய கோர்ட் வளாகத்திலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE