ஸ்ரீபெரும்புதுார்:'டிவி' நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, அவரது கணவரிடம், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர், நேற்று எட்டு மணி நேரத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தினார்.
சென்னையைச் சேர்ந்த, 'டிவி' நடிகை சித்ரா, 29. இம்மாதம், 9ம் தேதி, பூந்தமல்லி அருகே, செம்பரம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தற்கொலை செய்து கொண்டார். நசரத்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.சித்ரா தற்கொலை குறித்து, அவரது குடும்பத்தினர் மற்றும் மாமியார், மாமனாரிடம், ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஒ., திவ்யஸ்ரீ, ஏற்கனவே விசாரணை நடத்தினார். சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை, ஆர்.டி.ஒ., விசாரிக்க இருந்த நிலையில், போலீசார் கைது செய்து, பொன்னேரி கிளை சிறையில், 14ம் தேதி அடைத்தனர்.
இந்நிலையில், ஆர்.டி.ஒ., விசாரணைக்காக, பொன்னேரி கிளை சிறையில் இருந்து, ஹேம்நாத் நேற்று ஸ்ரீபெரும்புதுார் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு ஹேம்நாத்திடம், ஆர்.டி.ஒ., திவ்யஸ்ரீ, எட்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்.
ஏதோ பெரிய மன அழுத்தம்!
சித்ரா மரணம் குறித்த விசாரணை, ஒரு சார்பாகவே இருக்கிறது. சித்ரா போனில் பேசிய, புதிய நட்பு வட்டாரம், பழைய நட்பு வட்டாரம் குறித்து, போலீசார் ஏதும் கண்டுபிடிக்கவில்லை. அவர், மொபைல் போனில் பேசிய, 'கால் லிஸ்ட்' குறித்து, எதுவும் வெளியே வரவில்லை. யாருடைய வற்புறுத்தலில், இது நடக்கிறது என தெரியலை.
ஆறு நாட்கள் நல்லபடியாக விசாரணை நடந்தது; ஏழாவது நாள், ஆர்.டி.ஒ., விசாரணை நடக்க இருந்த நிலையில், என் மகன் கைது செய்யப்பட்டுள்ளான்.யார் யாருடன் சித்ரா பேசியுள்ளார் என்ற விபரத்தை சேகரித்து, உண்மையை கண்டறிய வேண்டும். சித்ரா தற்கொலைக்கு, ஏதோ பெரிய மன அழுத்தம் இருந்திருக்கிறது. அது மிரட்டலா அல்லது வேறு ஏதாவதா என்பதை, போலீசார் கண்டுபிடிக்க வேண்டும்.சித்ராவிற்கு பெரிய பொருளாதார பிரச்னை இருந்திருக்கிறது. யாராவது பணம் கேட்டு மிரட்டியதால், பிரச்னையில் சிக்கி கொண்டாரா என, தெரியவில்லை.
ரவிச்சந்திரன்,
ஹேம்நாத்தின் தந்தை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE