பொது செய்தி

தமிழ்நாடு

'மணக்காத' மல்லிகை

Added : டிச 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:தட்டுப்பாடு காரணமாக மார்க்கெட்டில் மல்லிகை பூ இல்லாத சூழல் உருவாகியுள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 1,400 ரூபாய்க்கு விற்றது.திண்டுக்கல், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஓசூர் என அனைத்து பகுதியில் இருந்து மல்லிகை வரத்து குறைந்ததால், திருப்பூர் மார்க்கெட்டுக்கு, 100 கிலோ வருவதே அரிதாக உள்ளது.தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று, 1,400 ரூபாய்க்கு விற்றது.

திருப்பூர்:தட்டுப்பாடு காரணமாக மார்க்கெட்டில் மல்லிகை பூ இல்லாத சூழல் உருவாகியுள்ளது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ, 1,400 ரூபாய்க்கு விற்றது.திண்டுக்கல், சத்தியமங்கலம், நிலக்கோட்டை, ஓசூர் என அனைத்து பகுதியில் இருந்து மல்லிகை வரத்து குறைந்ததால், திருப்பூர் மார்க்கெட்டுக்கு, 100 கிலோ வருவதே அரிதாக உள்ளது.தட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று, 1,400 ரூபாய்க்கு விற்றது. அதே நேரம், சம்பங்கி பூவுக்கு சீதோஷ்ண நிலை ஒத்துழைப்பதால், இரண்டு டன் வந்து குவிகிறது. கிலோ, 180 ரூபாய்க்கு சம்மங்கி விற்றது. பெரும்பாலான கடைகளில் சம்மங்கி விற்கப்பட்டது.பூ வியாபாரிகள் கூறுகையில், 'வரத்துக்கு ஏற்ப தான் விலை நிலவரம் முடிவெடுக்கப்படும். இதுவரை மல்லிகை பூ வரத்து இவ்வளவு குறைந்ததில்லை. விசேஷ தினம் இல்லாத சூழலிலும், 1,400 ரூபாய்க்கு மல்லிகை விற்பது இதுவே முதல் முறை,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X