சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தால் பாதிக்கப்பட்டவருக்கு மறுவாழ்வு

Added : டிச 17, 2020
Share
Advertisement
சென்னை:விபத்தில் கால்கள் அகற்றப்பட்ட வாலிபருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், சிதாத்துார் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர், பிரதாப், 19. இவர், அதே பகுதியில், 2019ல், கையில் குடையுடன், சாலையில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்றார். அவரது குடை எதிர்பாராத விதமாக மின் ஒயரில் உரசியது.

சென்னை:விபத்தில் கால்கள் அகற்றப்பட்ட வாலிபருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், செயற்கை கால்கள் பொருத்தப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், சிதாத்துார் திருக்கை கிராமத்தை சேர்ந்தவர், பிரதாப், 19. இவர், அதே பகுதியில், 2019ல், கையில் குடையுடன், சாலையில் தேங்கிய மழை நீரில் நடந்து சென்றார். அவரது குடை எதிர்பாராத விதமாக மின் ஒயரில் உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்து, நெஞ்சு பகுதியிலும், இரண்டு முழங்காலுக்கு கீழ் பகுதியிலும் படுகாயம் அடைந்தார்.

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, இரண்டு முழங்கால்களின் கீழ் பகுதி அகற்றப்பட்டது.இதையடுத்து, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை செய்து, இரண்டு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன.

இது குறித்து, மருத்துவமனை முதல்வர் வசந்தாமணி கூறியதாவது:இரண்டு கால்களும் அகற்றப்பட்ட நிலையில் இருந்த வாலிபருக்கு, செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. மேலும், எழுந்து நடப்பதற்கான, இயன்முறை சிகிச்சை மற்றும் தசை பலத்தை அதிகரிக்க, உடற்பயிற்சிகள் அளிக்கப்பட்டன. வாலிபருக்கு தொடர்ந்து ஊக்கம் அளித்து நடக்க வைத்துள்ளோம். இவ்வாறு, வசந்தாமணி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X