சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: பி.டி.ஓ., ஆபீசில் மக்கள் போராட்டம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
பல்லடம்;அடிப்படை வசதி கேட்டு பல ஆண்டாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, பி.டி.ஓ., ஆபீசில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் ஒன்றியம், கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மூகாம்பிகை அவென்யூ பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆறு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை
 மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை: பி.டி.ஓ., ஆபீசில் மக்கள் போராட்டம்

பல்லடம்;அடிப்படை வசதி கேட்டு பல ஆண்டாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி, பி.டி.ஓ., ஆபீசில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பல்லடம் ஒன்றியம், கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சி, மூகாம்பிகை அவென்யூ பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆறு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று பி.டி.ஓ.,ஆபீசுக்கு படையெடுத்தனர்.அப்பகுதியினர் கூறியதாவது:ஆறு ஆண்டுகளாக குடிநீர், ரோடு, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குடிநீர் வசதி இல்லாமல், சப்பை தண்ணீரை குடித்து வாழ்ந்து வருகிறோம். அதிலும் தற்போது உப்பு அதிக அளவில் படிந்து வருவதால், பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.ஊராட்சி தலைவர் முதல் கலெக்டர் வரை பலமுறை மனு அளிக்கப்பட்டதுடன், ஒவ்வொரு கிராம சபை கூட்டத்தின் போதும் மனு கொடுத்தோம். நடவடிக்கை இல்லாததால், பி.டி.ஓ., ஆபீசுக்கு வந்தோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.பொதுமக்களுடன், பி.டி.ஓ., குருவம்மாள் பேசினார். தொடர்ந்து, மூகாம்பிகை அவென்யூ பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார். பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X