பல்லடம்:மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகங்களிலும், 'ஸ்ட்ராங் ரூமில்' வைக்கப்பட்டுள்ளன.வேலுார் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட, 5,798 ஓட்டு இயந்திரங்கள், 2,515 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், மற்றும் 190 விவி., பேட் உள்ளிட்டவை திருப்பூர், பல்லடம் தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி, 15ல் துவங்கியது. அனைத்து கட்சியினர் முன்னிலையில், ஓட்டப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி சுறுசுறுப்புடன் நடந்து வருகிறது.தேர்தல் பிரிவு தனி தாசில்தார் மயில்சாமி கூறுகையில், ''மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்தும் பணியில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பொறியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இயந்திரங்களில் உள்ள எண்கள், முத்திரை, ஸ்டிக்கர், அட்டை அகற்றப்பட்டு தயார்படுத்தப்பட்டு வருகின்றன,'' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE