பல்லடம்;பல்லடம் அருகே, ரோட்டோர மரங்கள் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.பல்லடத்தை அடுத்த வதம்பச்சேரி - நல்லுார்பாளையம் செல்லும் ரோட்டில், ரோடு போடும் பணி நடந்து வருகிறது. இதை சாதகமாக்கிய சிலர், ரோட்டோரத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தி உள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், ''நல்லுார்பாளையம் செல்லும் வழித்தடத்தில் எண்ணற்ற நிழல் தரும் மரங்கள் இருந்தன. ரோடு போடும் பணியை காரணமாக கொண்டு, நீண்டகால மரங்களை சிலர் வேருடன் வெட்டி எடுத்து சென்றனர். பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்ட கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், விதிமுறை மீறி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.இது குறித்து, கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேஷ் கூறுகையில், ''நல்லுார்பாளையத்தை சேர்ந்த சிலர் மரங்களை வெட்டியுள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE