பொது செய்தி

தமிழ்நாடு

'க்யூஆர் கோடு' அடையாள அட்டை! ஆசிரியர்களுக்கு வினியோகம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'க்யூஆர் கோடுடன்' கூடிய அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டு உள்ளது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகள் தற்போது 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வந்துள்ளன.இதில் ஆசிரியர்களின் பெயர், ஐ.டி., எண், தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர், ஆதார் எண், ரத்த வகை, முகவரி, மொபைல் எண், ஆகிய விவரங்கள்
 'க்யூஆர் கோடு' அடையாள அட்டை! ஆசிரியர்களுக்கு வினியோகம்

திருப்பூர்:அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'க்யூஆர் கோடுடன்' கூடிய அடையாள அட்டை வினியோகிக்கப்பட்டு உள்ளது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அலுவலர்களுக்கும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டைகள் தற்போது 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் வந்துள்ளன.இதில் ஆசிரியர்களின் பெயர், ஐ.டி., எண், தற்போது பணிபுரியும் பள்ளியின் பெயர், ஆதார் எண், ரத்த வகை, முகவரி, மொபைல் எண், ஆகிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலுள்ள, 'க்யூஆர் கோடு' ஸ்கேன் செய்தால், ஆசிரியரின் கல்வித்தகுதி, பணியில் சேர்ந்த தேதி, பணிபுரிந்த பள்ளிகளின் பெயர், போன்ற அனைத்து விவரங்களும் தெரிந்துவிடும்.திருப்பூர் மாவட்டத்திற்கு முதல்கட்டமாக, 8 ஆயிரத்து, 74 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் பணிக்காலத்தில் தினசரி இதனை கட்டாயம் அணிய வேண்டுமென கல்வித்துறை அதிகாரிகள் அறிவுத்தியுள்ளனர்.வினியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகளில் வேறு ஒருவரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக சில ஆசிரியர்களின் புகார் தெரிவித்துள்ளனர். இதனை திருத்தம் செய்ய அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X