பொது செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில் டிச.30ல் ஆருத்ரா தரிசனம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனம் டிச., 30ல் நடக்கிறது.இக்கோயிலில் உள்ள சிவகாம சுந்தரி, நடராஜர் ஆருத்ரா தரிசன விழாடிச., 21 இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன்விழா துவங்கிறது. டிச.22 முதல் டிச. 28 வரை திருவெம்பாவை வாசித்தாலும், மாணிக்கவாசகர் ஆடிவீதி வலம் வருதல் நடக்கிறது.டிச., 29 ல் இரவு 7:00 மணிக்கு நடராஜர் சிவகாம

பரமக்குடி : பரமக்குடி சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில், ஆருத்ரா தரிசனம் டிச., 30ல் நடக்கிறது.இக்கோயிலில் உள்ள சிவகாம சுந்தரி, நடராஜர் ஆருத்ரா தரிசன விழாடிச., 21 இரவு 7:00 மணிக்கு மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுதலுடன்விழா துவங்கிறது.

டிச.22 முதல் டிச. 28 வரை திருவெம்பாவை வாசித்தாலும், மாணிக்கவாசகர் ஆடிவீதி வலம் வருதல் நடக்கிறது.டிச., 29 ல் இரவு 7:00 மணிக்கு நடராஜர் சிவகாம சுந்தரியுடன் பச்சை சாத்திபுறப்பாடு நடக்கிறது. 8:00 மணிக்கு கோயில் மண்டபத்தில் சுவாமிஆனந்த தாண்டவம் ஆடுதல் நடக்கிறது. டிச.30 அதிகாலை 3:00 மணிக்கு ஹோமங்கள் ஆரம்பமாகி, காலை 4:00 மணிக்கு மகா அபிேஷகம் நடக்கிறது.

இதனையடுத்து 5:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம் மகா தீபாராதனை நடக்கிறது.காலை 9:00 மணிக்கு உற்சவர், மாணிக்கவாசகர் வீதி உலா, இரவு விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி, பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளல் நடக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜப்பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X