ராமநாதபுரம் : ராமநாதபுரம் ஓ.என்.ஜி.சி., நிதி உதவியுடன் ரூ.45 லட்சம் செலவில் நகராட்சிக்கு பாதாளசாக்கடை கழிவுகளை ரோபோடிக் இயந்திரம் மூலம் அகற்றும் பணி துங்கியது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மணிகண்டன் எம்.எல்.ஏ., ரோபடிக் ஆகியோர் இயந்திரம் மூலம் பாதாளசாக்கடை கழிவுநீர் அகற்றும் பணியை தொடங்கி வைத்தனர்.ஓ.என்.ஜி.சி., முதன்மை மேலாளர் மாறன் முன்னிலை வகித்தார்.சென்னையை சேர்ந்த ேஹண்ட் இன்ேஹன்ட் எனும் தொண்டுநிறுவனம், ராமநாதபுரம் நகராட்சியுடன் இணைந்து ரூ.45 லட்சம் செலவில் பெருச்சாளி எனும் பொருள்படும் ஜென் ரோபோடிக் ஓ.என்.ஜி.சி., நிதிஉதவியுடன் வாங்கப்பட்டுள்ளது. 10,505 பாதாளசாக்கடை இணைப்புகளில் 2160 மனிதன் உட்புகும் ஆள்நுழை தொட்டியில் உள்ள அடைப்புகளை சரிசெய்யும் விதமாக ரோபோடிக் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ேஹண்ட் இன் ேஹண்ட் பொதுமேலாளர் புத்தேரி பாபு கூறுகையில், ரோபோ இயந்திரம் மூலம் ஆபத்தான விஷ வாயுக்களை கண்டறியும் வசதி, எளியமுறையில் இயக்கலாம், குறைவான எடை, கேமரா வசதியும் உள்ளது. மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளவேண்டியது இல்லை, குறிப்பாக விஷவாயுதாக்கி மனித உயிர் இழப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். தமிழகத்தில் 7 இடங்களில் ரோபோ பயன்படுத்த திட்டமிட்டு தற்போது ராமநாதபுரம்,விருதுநகர்,தஞ்சாவூர், நாகப்பட்டணம், மயிலாடுதுறையில் உள்ளது. திருவாரூர், கடலுாரில் பயன்படுத்தப்படும் என கூறினார்.நகராட்சி கமிஷனர் (பொ) நிலேஸ்வர், திருவனந்தபுரம் ஜெனிரோபாடிக் நிறுவன இயக்குனர் ராஷித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE