திருவாடானை : திருவாடானை சமத்துவ புரம் அருகே 37 நரிக்குறவ குடும்பத்தினர் வசிக்கின்றனர். 2002ல் கட்டப்பட்ட இக் குடியிருப்பில் உள்ள வீடுகளின் சுவர்கள் விரிசல் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது.
இது குறித்து நரிக்குறவர்கள் புதிய வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.வீடுகளை பார்வையிட்ட தாசில்தார் மாதவன் கூறியதாவது-அனைத்து வீடுகளும் சேதமடைந்து உள்ளது. குடியிருக்க முடியாத நிலை இருப்பதால் புதிய வீடுகள் கட்டதிட்டம் தயாரிக்கபட்டு கலெக்டருக்கு அனுப்பபட்டது. நிதி ஒதுக்கீட்டிற்கு பிறகு நடவடிக்கை எடுக்கபடும்,என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE