ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு சங்கம் மூலம் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர் பணியிடத்திற்கான நேர்காணல் டிச.,17 முதல் 30 வரை நடக்கிறது. மொத்தமுள்ள 736 கடைகளில் இதில் 40 கடைகளில் விற்பனையாளர் பணியிடத்திற்கு 5696 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் நேற்று கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் நடுக்காட்டுராஜா முன்னிலையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தனியார் கல்வியியல் கல்லுாரியில் நடந்தது. நேற்று மட்டும் 600 பேர் பங்கேற்றுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE