அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு வாபஸ் பெற வேண்டும்! இந்திய கம்யூ., மாநிலக்குழு தீர்மானம்

Added : டிச 17, 2020
Share
Advertisement
திருப்பூர்:இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம், செங்கப்பள்ளியில், மூன்று நாட்கள் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தனர். மூத்த நிர்வாகி தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் உட்பட, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்று பேசினர்.இதில், மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:மத்திய

திருப்பூர்:இந்திய கம்யூ., கட்சியின் மாநிலக்குழு கூட்டம், செங்கப்பள்ளியில், மூன்று நாட்கள் நடந்தது.முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, மாவட்ட செயலாளர் ரவி தலைமை வகித்தனர். மூத்த நிர்வாகி தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் சுப்பராயன், தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் உட்பட, மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்று பேசினர்.இதில், மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். மின்சார மசோதாவையும் திரும்ப பெற வேண்டும். லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேசி, சுமூக முடிவை ஏற்படுத்த வேண்டும்.ரேஷன் கடைகளில், தரமான உணவு பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். காஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும். நுாலகங்களை மூடும் முடிவை கைவிட்டு, நுாலகங்களில், தினஇதழ், வார இதழ், மாத இதழ்களை வாங்க மீண்டும் அனுமதிக்க வேண்டும். தளர்வுகள் வழங்கிவிட்டதால், கொரோனா ஊரடங்கு உத்தரவை வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X