சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இயந்திரத்தில் சிக்கி சிறுமி காயம்

Updated : டிச 18, 2020 | Added : டிச 17, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
சேலம்:மாவு மில் இயந்திரத்தில் சிக்கி கால்களில் படுகாயம் அடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.சேலம் மாவட்டம், மணியனுாரைச் சேர்ந்த கண்ணன் - தீபிகா தம்பதியின் மகள் தர்ஷினி, 4; யு.கே.ஜி., படிக்கிறார்.ஓராண்டுக்கு முன், தீபிகா பிரிந்து சென்று, மறுமணம் செய்து கொண்டார். கூலித்தொழிலாளியான கண்ணன், மன வேதனையில் இறந்து விட்டார்.தாத்தா பொன்னுவேல், பாட்டி
 இயந்திரத்தில் சிக்கி சிறுமி காயம்

சேலம்:மாவு மில் இயந்திரத்தில் சிக்கி கால்களில் படுகாயம் அடைந்த சிறுமி, மேல் சிகிச்சைக்கு பணமின்றி தவித்து வருகிறார்.

சேலம் மாவட்டம், மணியனுாரைச் சேர்ந்த கண்ணன் - தீபிகா தம்பதியின் மகள் தர்ஷினி, 4; யு.கே.ஜி., படிக்கிறார்.ஓராண்டுக்கு முன், தீபிகா பிரிந்து சென்று, மறுமணம் செய்து கொண்டார். கூலித்தொழிலாளியான கண்ணன், மன வேதனையில் இறந்து விட்டார்.தாத்தா பொன்னுவேல், பாட்டி மாரியம்மாள் பராமரிப்பில், தர்ஷினி வளர்கிறார்.

சமீபத்தில், வீட்டருகே விளையாடிய சிறுமி, அருகில் உள்ள கிழங்கு மாவு மில்லுக்குள் சென்ற பந்தை எடுக்க ஓடினார். அப்போது வழுக்கி, இயந்திரத்தில் விழுந்தார்.இதில், காலில் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில், இரு கால்களில், மூன்று ஆப்பரேஷன்கள் செய்தனர். பொன்னுவேல், தன் வீட்டை, 7 லட்சம் ரூபாய்க்கு விற்று செலவு செய்தார். மேல் சிகிச்சை அளிக்க, இன்னும், 4 லட்சம் ரூபாய் செலவாகும் என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால், தாத்தா, பாட்டி பரிதவித்து வருகின்றனர்.

நேற்று முன்தினம், கொண்டலாம்பட்டியில், 'மினி கிளினிக்' திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வரிடம், பொன்னுவேல் மனு வழங்கினார். உதவ, 96774 45532 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
19-டிச-202012:25:43 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ சிறுகுழந்தைகள் ஆபத்தான எந்திரங்கள் அருகே வரும் அளவு பாதுகாப்பு குறைவான கிழங்கு மாவு அரவை ஆலை நடத்திவரும் அந்த ஆலை அதிபர்தான் முழு செலவையும் ஏற்க வைத்து பாதுகாப்புகுறைபாடுக்கான நடவடிக்கையும் அவர்மேல் எடுக்கவேண்டும், அந்த குடும்பத்திற்கு நட்டஈடும் அவர் கொடுக்வேண்டும், அப்படிச் செய்தால்தான் இது உண்மையான மக்களுக்கான அரசு மக்களுக்கான முதல்வர்,
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
19-டிச-202009:37:31 IST Report Abuse
Bala Murugan அதான் முதல்வரிடம் மனு கொடுத்தாச்சே அவர் இன்று முதல் பிரச்சாரம் ஆரம்பிக்கிறார். அதனால் நிச்சயம் முதல்வரே முழு உதவியும் வழங்குவார். அவருடைய சொந்த ஊர் வேறு.
Rate this:
Cancel
Vijayanand G - ERODE,இந்தியா
18-டிச-202014:03:56 IST Report Abuse
Vijayanand G தயவு செய்து பேங்க் அக்கௌன்ட் விபரங்களை தரவும் . இது அனைவரும் NEFT செய்ய வசதி யாக இருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X