சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி வெட்டி கொலை 'மாஜி' இன்ஸ்., தற்கொலை

Added : டிச 17, 2020
Share
Advertisement
மதுரை:லஞ்சம் வாங்கிய வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர், மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று, தற்கொலை செய்து கொண்டார்.மதுரை, தத்தனேரி களத்துபொட்டலில் வசித்தவர், பெருமாள் பாண்டியன், 54. இவர், 2010ல் மதுரை லஞ்ச ஒழிப்பு துறையில், இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சித்த மருத்துவர் அசோக்குமார் மீது

மதுரை:லஞ்சம் வாங்கிய வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறை தண்டனை பெற்ற லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர், மனைவியை கோடாரியால் வெட்டி கொன்று, தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை, தத்தனேரி களத்துபொட்டலில் வசித்தவர், பெருமாள் பாண்டியன், 54. இவர், 2010ல் மதுரை லஞ்ச ஒழிப்பு துறையில், இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சித்த மருத்துவர் அசோக்குமார் மீது வழக்கு பதியாமல் இருக்க, 2010 செப்டம்பரில், 1.20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றபோது, லஞ்ச ஒழிப்பு போலீசாராலேயே கைது செய்யப்பட்டார். பின், பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இவ்வழக்கில், சில நாட்களுக்கு முன், மதுரை சிறப்பு நீதிமன்றம், மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீடு செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில், நேற்று மதியம் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று திரும்பிய, பெருமாள் பாண்டியனின் மூத்த மகன் சுந்தர் சுதர்சன், 22, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பதை கண்டார். பலமுறை தட்டியும் திறக்காததால், பின்பக்கம் சென்று பார்த்தார்.அப்போது, வீட்டினுள் தாய் உமாமீனாட்சி, 46, வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

அருகில் கோடாரி, கத்தி கிடந்தது. பெருமாள் பாண்டியன், துாக்கு போட்டு தற்கொலை செய்திருந்தார். செல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். இளைய மகன் கவுதம், 14, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். தற்போது, வெளியூரில் உறவினர் வீட்டில் உள்ளார்.


மன உளைச்சல்

போலீசார் கூறியதாவது:லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய இன்ஸ்பெக்டரே லஞ்சம் பெற்றதாக, தமிழகத்திலேயே முதன் முறையாக, சிறை தண்டனை பெற்றது, பெருமாள் பாண்டியன் தான். இதை பெருத்த அவமானமாக கருதி, மன உளைச்சலுக்கு ஆளானார்.

இச்சூழலில் சில நாட்களாகவே கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை காரணமாக, கருத்து மோதல் ஏற்பட்டது. நேற்று காலை, இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்ட சூழலில் தான், மனைவியை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X