அரிய வகை கழுகுகோவையில் மீட்பு
கோவை:கோவை சூலுாரில், இறக்கையில் எலும்பு முறிவுடன் தென்பட்ட எகிப்தியன் பிணந்தின்னி கழுகை மாணவர் ஒருவர் மீட்டு, கொங்குநாடு கலை கல்லுாரி பேராசிரியர் வெங்கிடாசலத்திடம் ஒப்படைத்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின், கோவை வனத்துறையினரிடம் கழுகு ஒப்படைக்கப்பட்டது.
ரூ. 1.52 கோடி தங்கம் பறிமுதல்
திருச்சி: துபாய் மற்றும் சிங்கப்பூரில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதில், தங்கம் கடத்தி வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டு, 1.52 கோடி ரூபாய் மதிப்புள்ள, 3.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
கணவர் இறந்த சோகம் மனைவி, மகள் தற்கொலை
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம், முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி லலிதா, 38. இவரது மகள் தர்ஷினி, 18. புதுச்சேரியில் உள்ள தனியார் கல்லுாரியில், மயக்கவியல் பிரிவில் முதலாமாண்டு படித்து வந்தார்.கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பாலமுருகன் உடல் நலக்குறைவால் இறந்தார். இதனால், லலிதா, தர்ஷினி மனமுடைந்த நிலையில் இருந்தனர். நேற்று மதியம், இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE