சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தில் கால்வாய் இருந்தும் முறைப்படி அமைக்கப்படாததால் கழிவு நீர் தேங்கி நோய் அபாயம் நீடிக்கிறது.
இக்கிராமத்தில் விஸ்வகர்மா நகரில் இருந்து அரசு துவக்கப்பள்ளி வழியாக தொடக்க கூட்டுறவு சங்கம் வரை கழிவு நீர் கால்வாய் உள்ளது. முக்கிய தெருக்களில் இருந்து வரும் கழிவுநீர் இக்கால்வாய் வழியாகத்தான் செல்கிறது. பல்வேறு கால கட்டங்களில் பகுதிகளாக கட்டப்பட்டதால் கால்வாய் மேடும் பள்ளமுமாக சீரற்ற நிலையில் உள்ளது.
சில இடங்களில் கழிவுநீர் தேங்கி அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. குறிப்பாக தண்ணீர் வெளியேறும் இடமான கூட்டுறவு சங்கம் அருகே கால்வாய் உயரமாக உள்ளதால் அப்பகுதியில் எந்நேரமும் கழிவு நீர் தேங்கியுள்ளது.
ஊராட்சி நிர்வாகம் சார்பில் அடிக்கடி கால்வாயை சுத்தப்படுத்தினாலும் கழிவுநீர் வெளியேற வழியில்லை. கால்வாய் துவங்கும் இடத்தில் இருந்து அதை உயரப்படுத்தி கொண்டு வந்தால் மட்டுமே நிரந்த தீர்வு ஏற்படும். எனவே விஸ்வகர்மா நகரில் இருந்து கூட்டுறவு சங்கம் வரை உள்ள கால்வாயை தேவையான இடங்களில் உயரப்படுத்தி சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE