தேவகோட்டை : தேவகோட்டை தாலுகாவில் பூச்சி தாக்குதலால் நெற்பயிர்கள் பால்விடும் தருணத்தில் விளையாமல் வீணாகி வருகிறது.
இத்தாலுகாவில் ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவு செய்துள்ளனர். தொடர் மழையால் நெற்பயிர்கள் விளைந்து வருகின்றன. தற்போது பால்விடும் தருணத்தில் பயிர்கள் முளைத்துள்ளது. இத்தருணத்தில் பயிர்கள் தண்ணீரில் சாய்ந்து வருகின்றன. இதனால், பூச்சிகள் தாக்கி நெற்பயிர்கள் வீணாவதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து விவசாய சங்க பொது செயலாளர் ராஜபாண்டியன் கூறியதாவது, இப்பகுதியில் 3 வித பூச்சி தாக்குதல் நெற்பயிர்களுக்கு ஏற்பட்டுள்ளது. புது நெல் ரகங்கள் வருகைக்கு ஏற்ப நோயும் வருகிறது. இதை தவிர்த்து, விளைந்த நெற்பயிர்களை காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முப்பையூர் பகுதி விவசாயிகள் கலெக்டரிடம் புகார் செய்துள்ளனர், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE