புதுச்சேரி அரசியலுக்கு 'முழுக்கு': மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவிப்பு

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுச்சேரி :புதுச்சேரி அரசியலில் இருந்து விலக உள்ளதாக, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்துள்ளார்.பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அரசு சார்பு நிறுவனங்களின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார். புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு பாராட்டு விழா, விஜயவாடாவில் நேற்று நடந்தது.இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற
புதுச்சேரி, அரசியல், முழுக்கு, மல்லாடி கிருஷ்ணாராவ்,

புதுச்சேரி :புதுச்சேரி அரசியலில் இருந்து விலக உள்ளதாக, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் அறிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அரசு சார்பு நிறுவனங்களின் தலைவர் உள்ளிட்ட பதவிகளை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வழங்கி உள்ளார். புதிதாக பொறுப்பேற்றவர்களுக்கு பாராட்டு விழா, விஜயவாடாவில் நேற்று நடந்தது.

இவ்விழாவில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசுகையில், 'புதுச்சேரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், விலகவும் முடிவு செய்துள்ளேன். இதுகுறித்த அறிவிப்பை, வரும் ஜனவரி 6ம் தேதியன்று வெளியிடுவேன். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அனுமதித்தால், ஆந்திராவில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்' என கூறினார்.

தொடர்ந்து 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக உள்ள மல்லாடி கிருஷ்ணாராவின் வெள்ளி விழா கொண்டாட்டத்துக்கு, ஏனாமில் வரும் ஜனவரி 6ம் தேதியன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில், புதுச்சேரி அரசியலில் இருந்து விலகும் முடிவை அறிவிக்க உள்ளதாக மல்லாடி கிருஷ்ணாராவ் பேசி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, ஜெகன்மோகன் ரெட்டிக்கு மல்லாடி கிருஷ்ணாராவ் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
18-டிச-202008:28:48 IST Report Abuse
Balasubramanian Ramanathan கூடங்குளத்தாருக்கு இப்படி ஒரு சோதனையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X