பொது செய்தி

தமிழ்நாடு

செயற்கை நிறம் கலந்த ஏலக்காய் கண்டறிய ஆய்வகம் அமைக்க முடிவு

Added : டிச 18, 2020
Share
Advertisement
கம்பம் : செயற்கை நிறம் கலந்த ஏலக்காய்களை கண்டறிய நவீன ஆய்வகங்களை கேரளமாநிலம் புத்தடி மற்றும் தேனிமாவட்டம் போடியில் உள்ள ஏல மையங்களில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.நறுமணப்பொருள்களின் ராணி எனப்படும் ஏலக்காய் நல்ல நிறமாக இருந்தால் விலை கூடுதலாக கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனுடைய ஒரிஜினல் பச்சை நிறம் மாறி வெளுத்துவிடும். எனவே விவசாயிகள்

கம்பம் : செயற்கை நிறம் கலந்த ஏலக்காய்களை கண்டறிய நவீன ஆய்வகங்களை கேரளமாநிலம் புத்தடி மற்றும் தேனிமாவட்டம் போடியில் உள்ள ஏல மையங்களில் நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது.

நறுமணப்பொருள்களின் ராணி எனப்படும் ஏலக்காய் நல்ல நிறமாக இருந்தால் விலை கூடுதலாக கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்குள் அதனுடைய ஒரிஜினல் பச்சை நிறம் மாறி வெளுத்துவிடும். எனவே விவசாயிகள் சமீபகாலங்களில் ஏலக்காய் உலர்த்தும் மையங்களில் செயற்கை நிறம் சேர்ப்பதை வழக்கமாக கொண்டனர்.இது கேரள மாநில உணவு பாதுகாப்புத்துறை சட்டங்களுக்கு எதிரானது.

எனவே ஸ்பைசஸ் வாரியமும், உணவு பாதுகாப்புத்துறையினரும் பலமுறை கூட்டாக சோதனை நடத்தின. கடும் எச்சரிக்கையும் விடப்பட்டது. எனினும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.எனவே தற்போது புத்தடி மற்றும் போடியில் உள்ள ஸ்பைசஸ் வாரியத்தின் ஏல மையங்களில் செயற்கை நிறத்தை கண்டறிய நவீன ஆய்வகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அங்கு சோதனை முடிவில் செயற்கை நிறம் கலந்தது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயியின் மொத்த ஏலக்காய்களும் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X