பொது செய்தி

தமிழ்நாடு

முன்னோடி விவசாயிகளை சந்திக்கணும்! வேளாண் துறை கமிஷனர் அறிவுறுத்தல்

Added : டிச 18, 2020
Share
Advertisement
சூலுார்:''கிராமங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளை மாதம் இருமுறை சந்தித்து, அரசு திட்டங்களை விளக்க வேண்டும்,'' என, வேளாண் அதிகாரிகளுக்கு, வேளாண் உற்பத்தி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தினார்.உழவர், அலுவலர் தொடர்பு திட்டத்தின் கீழ், முன்னோடி விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடந்தது.வேளாண் உற்பத்தி கமிஷனரும், அரசு
 முன்னோடி விவசாயிகளை சந்திக்கணும்! வேளாண் துறை கமிஷனர் அறிவுறுத்தல்

சூலுார்:''கிராமங்களில் உள்ள முன்னோடி விவசாயிகளை மாதம் இருமுறை சந்தித்து, அரசு திட்டங்களை விளக்க வேண்டும்,'' என, வேளாண் அதிகாரிகளுக்கு, வேளாண் உற்பத்தி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி அறிவுறுத்தினார்.உழவர், அலுவலர் தொடர்பு திட்டத்தின் கீழ், முன்னோடி விவசாயிகளை சந்திக்கும் நிகழ்ச்சி, சூலுார் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் நடந்தது.வேளாண் உற்பத்தி கமிஷனரும், அரசு முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி பேசியதாவது:உழவர், அலுவலர் தொடர்பு திட்டம் உன்னதமான திட்டம். உழவர்களுக்கும், அலுவலர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்து, ஆலோசனை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதே திட்டத்தின் நோக்கம். கிராமங்களில் உள்ள, 10 முன்னோடி விவசாயிகளை, மாதம் இரு முறை நேரில் சென்று சந்திக்க வேண்டும். அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்தும், தொழில்நுட்பங்கள் குறித்தும் விளக்க வேண்டும். அந்த விவசாயிகள் வாயிலாக, மற்ற விவசாயிகளை சந்தித்து அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்ந்து தடையின்றி நடக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையா, கோவை வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் புவனேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். தொழில்நுட்ப கையேடுகள், இடுபொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. சுற்றுவட்டார விவசாயிகள் மற்றும் வேளாண் அலுவலர்கள் பலர் பங்கேற்றனர். சூலுார் வட்டார வேளாண் உதவி இயக்குனர் விஜய கல்பனா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X