துாத்துக்குடி:''அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் செய்யும் சதியில் விவசாயிகள் விழுந்து விடக்கூடாது'' என டில்லி போராட்டம் குறித்து தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., தெரிவித்தார்.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., அரசு மக்கள் நம்பிக்கையை பெற்றுள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விவசாயிகள் போராட்டம் வருத்தமளிக்கிறது. விவசாயிகளின் வருங்காலம், வளர்ச்சி, வருமானம், வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டுதான் விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை அறிந்து தான் தமிழக அரசு ஆதரிக்கிறது.
அரசியல் கட்சிகளின் தூண்டுதல், விவசாயிகள் லாபத்தில் லாபம் பார்க்கும் தரகர்களின் கட்டாயப்படுத்தல், நிர்ப்பந்தம் அடிப்படையில் விவசாயிகளின் போராட்டம் ஒரு சில மாநிலங்களில் மட்டும் தொடரக்கூடிய துரதிஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் கூறியதுபோல ஒரு குழு அமைத்து மத்திய அரசுடன் பேசி நன்மை பயக்கக்கூடிய நல்ல நிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தி கொள்ள வேண்டும்'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE