பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனா டிஸ்சார்ஜ் 19,481 பேர்

Added : டிச 18, 2020
Share
Advertisement
மதுரை:மதுரை மாவட்டத்தில் புதிதாக17 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,481 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 28 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,215 ஆகும். இதுவரை 447 பேர் இறந்துள்ளனர். தற்போது 287 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.திண்டுக்கல்திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 26 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் 10 , 336 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 19 பேர்

மதுரை:மதுரை மாவட்டத்தில் புதிதாக17 பேர் கொரோனாவிடம் இருந்து மீண்டனர். இதுவரை 19,481 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். புதிதாக 28 பேர் பாதிக்கப்பட்டனர். ஒருவர் பலியானார். மொத்த பாதிப்பு 20,215 ஆகும். இதுவரை 447 பேர் இறந்துள்ளனர். தற்போது 287 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 26 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். குணமடைந்தோர் 10 , 336 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனால் பாதிக்கப் பட்டோர் 10 ,682 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 150 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 196 பேர் பலியாகியுள்ளனர்.

தேனி

தேனி மாவட்டத்தில் நேற்று 9 பேர் 'டிஸ்சார்ஜ்' ஆகினர். இதுவரை மொத்தம் 16,491 பேர் குணம் அடைந்து உள்ளனர். போடி பண்ணைப்புரம் 72 வயது முதியவர் பலியானார். மொத்த பலி எண்ணிக்கை 318.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று 4 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 2பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 6274 பேர் பாதிக்கப்பட்டதில் 6117 பேர் குணம் அடைந்து உள்ளனர். தற்போது 26பேர் சிகிச்சையில்உள்ளனர். மொத்தம் 131 பேர் பலியாகியுள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். புதிதாக 7 பேர் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டனர். மாவட்ட அளவில் 6444 பேர்களுக்கு கொரோனா ஏற்பட்டதில், 6260 பேர் குணமடைந்தனர். தற்போது 58 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 126 பேர் பலியாகினர்.

விருதுநகர்

விருதுநகரில் 27 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். 10பேருக்கு கொரோனா உறுதியானது. பாதித்த
16 ,103பேரில் 15,728பேர் குணமடைந்தனர். 152 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X