பொது செய்தி

தமிழ்நாடு

வணிகர் சங்கத்தலைவர் விக்கிரமராஜா யோசனை வணிகர்களுக்கு தனியாக சட்டசபை தொகுதி வேண்டும்

Added : டிச 18, 2020
Share
Advertisement
பழநி:''சட்டசபை தேர்தலில் வணிகர்கள் பங்கேற்கும் வகையில் தனியாக தொகுதி வழங்க வேண்டும். அரசில் தனி அமைச்சகமும் ஏற்படுத்த வேண்டும்'' என திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.அவர் கூறியதாவது:கொரோனா காலத்தில் பாதிப்புக்குள்ளான வியாபாரிகள் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்காலத்தில்

பழநி:''சட்டசபை தேர்தலில் வணிகர்கள் பங்கேற்கும் வகையில் தனியாக தொகுதி வழங்க வேண்டும். அரசில் தனி அமைச்சகமும் ஏற்படுத்த வேண்டும்'' என திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

அவர் கூறியதாவது:கொரோனா காலத்தில் பாதிப்புக்குள்ளான வியாபாரிகள் மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்காலத்தில் அவர்கள் மீது பதிவான விதிமீறல் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். கொரோனாவால் இறந்த வியாபாரிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். நகராட்சி பகுதி கடைகளுக்கு கொரோனா காலத்தில் 2 மாத வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

பழநி கோயிலில் 2வது ரோப்கார் பணியை விரைந்து முடிக்க வேண்டும். பழநியை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். தேஜஸ் ரயில் திண்டுக்கல் ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும். கோயம்பேடு மார்கெட்டை திறக்கவேண்டும். உருளை கிழங்கு, வெங்காயம், எண்ணெய் வித்துகள், பருப்பை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

டில்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக டிச.,22ல் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.குட்கா மொத்த விற்பனையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார். பழநி அனைத்து வணிக சங்க கவுரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வகுமார், வணிகர் சங்க செயலாளர் சந்திரசேகர், ராஜா, செய்திதொடர்பாளர் கார்த்தி உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X