பொது செய்தி

இந்தியா

2020ன் கடைசி 'லோக் அதாலத்': 10 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு

Updated : டிச 18, 2020 | Added : டிச 18, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'நாடு முழுதும் நடத்தப்பட்ட இந்த ஆண்டின் கடைசி, 'லோக் அதாலத்'எனப்படும், மக்கள் நீதிமன்றம் வாயிலாக, 10 லட்சம் வழக்குகளுக்கு மேல் தீர்வு காணப்பட்டது' என, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இந்த ஆண்டில், பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர், டிசம்பரில், லோக் அதாலத் நடத்த, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக தலைவர், நீதிபதி
லோக் அதாலத்,வழக்கு, தீர்வு

புதுடில்லி :'நாடு முழுதும் நடத்தப்பட்ட இந்த ஆண்டின் கடைசி, 'லோக் அதாலத்'
எனப்படும், மக்கள் நீதிமன்றம் வாயிலாக, 10 லட்சம் வழக்குகளுக்கு மேல் தீர்வு காணப்பட்டது' என, மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்த ஆண்டில், பிப்ரவரி, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர், டிசம்பரில், லோக் அதாலத் நடத்த, தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக தலைவர், நீதிபதி என்.வி.ரமணா
உத்தரவிட்டிருந்தார். கொரோனா காரணமாக, ஏப்ரல், ஜூலை, செப்டம்பர் மாதங்களில், லோக் அதாலத் நடத்தப்படவில்லை.


latest tamil news



கொரோனா பரவல் குறைந்த நிலையில், கடந்த, 12ல், நாடு முழுதும், லோக் அதாலத் நடத்தப்பட்டது. 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக வழக்குகள் விசாரிக்கப்பட்டன.இது பற்றி மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாடு முழுதும், 31 மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்கள் வாயிலாக, 8,152 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, காசோலை மோசடி, தொழிலாளர் பிரச்னை, நில ஆர்ஜிதம், ஜீவனாம்சம், விபத்து இழப்பீடு உள்ளிட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டன.மொத்தம், 10 லட்சத்து, 42 ஆயிரத்து, 816 வழக்குகளில், 3,227 கோடி ரூபாய் அளவுக்கு தீர்வு காணப்பட்டது.இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
18-டிச-202018:44:25 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஓய்வு பெற்றபின் இப்படி செயல்படுகிறார்களே என்ன காரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X