திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 75.8 மி.மீ., மழை பெய்தது.மாவட்டத்தில் சில நாட்களாக வெயில் அடித்த நிலையில், கடந்த 2 நாட்களாக மழை பெய்கிறது.
திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி, மாலப்பட்டி, நாகல்நகர் புதுார், பொன்னகரம், ரெட்டியார்சத்திரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது.நத்தம், வேடசந்துார், ஒட்டன்சத்திரம், பழநியிலும் விட்டு விட்டு பெய்தது.
திண்டுக்கல்லில் 18.7 மி.மீ., கொடைக்கானல் 8 மி.மீ., படகு குழாம் பகுதியில் 4.4 மி.மீ., பழநியில் 5 மி.மீ., சத்திரப்பட்டி 5.2 மி.மீ., நத்தம் 13.4 மி.மீ., நிலக்கோட்டை 5 மி.மீ., வேடசந்துார் 6.4 மி.மீ., காமாட்சிபுரம் 3.3 மி.மீ., என மொத்தம் 75.8 மி.மீ., மழை பதிவானது. இன்னும் 2 நாட்களுக்கு மழை இருப்பதாக பேரிடர் மேலாண்மை துறையினர் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE