'கொடை' பூங்காக்களில் அதிகார மையங்களால் அவதி

Added : டிச 18, 2020
Share
Advertisement
கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை பூங்காக்களில் அதிகாரம் படைத்தவர்களால் பூங்கா நிர்வாகம் அவதிப்படுகிறது.பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. பூங்காவை ரசிப்பதற்கு நிர்ணயகட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வி.ஐ.பி., க்கள் என பல்வேறு

கொடைக்கானல்: கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை பூங்காக்களில் அதிகாரம் படைத்தவர்களால் பூங்கா நிர்வாகம் அவதிப்படுகிறது.

பிரையன்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. பூங்காவை ரசிப்பதற்கு நிர்ணயகட்டணம் வசூலிக்கப்படுகிறது.ஆனால் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், வி.ஐ.பி., க்கள் என பல்வேறு தரப்பினர் கட்டணம் செலுத்த மறுத்து செல்வாக்கில் இலவசமாக ரசித்து செல்வதால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.அதிகார துஷ்பிரயோகம் செய்து பூங்கா அதிகாரிகளை மிரட்டுகின்றனர்.

நேர்மை அதிகாரிகள் கடமையை செய்யும் போது வாக்குவாதத்தில் ஈடுபடும் நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.இதை தவிர்க்க தோட்டக்கலை வளர்ச்சி முகமை, இ- கேட், கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளது. வரும் சீசனுக்குள் இம்முறை அமலாகும் என தோட்டக்கலைத் துறை கூறுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X