சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழி தீர்க்க முயன்ற மூவர் கைது

Added : டிச 18, 2020
Share
Advertisement
எரியோடு : எரியோடு அருகே தாய் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, இருவரை கொல்ல முயன்ற சம்பவத்தில் மூவரை போலீசார் கைது செய்தனர்.நல்லமனார்கோட்டை சொட்டமாயனுாரை சேர்ந்த கணேசன் மனைவி மஞ்சுளா என்ற மஞ்சளபேச்சி 45. வட்டித் தொழில் செய்த இவரை 2018 நவம்பரில் திருக்கண் பஸ் ஸ்டாப் அருகில் காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது. விசாரித்த வடமதுரை போலீசார், தொட்டணம்பட்டி

எரியோடு : எரியோடு அருகே தாய் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக, இருவரை கொல்ல முயன்ற சம்பவத்தில் மூவரை போலீசார் கைது செய்தனர்.

நல்லமனார்கோட்டை சொட்டமாயனுாரை சேர்ந்த கணேசன் மனைவி மஞ்சுளா என்ற மஞ்சளபேச்சி 45. வட்டித் தொழில் செய்த இவரை 2018 நவம்பரில் திருக்கண் பஸ் ஸ்டாப் அருகில் காரில் வந்த கும்பல் வெட்டிக் கொலை செய்தது. விசாரித்த வடமதுரை போலீசார், தொட்டணம்பட்டி மல்லீஸ்முருகன் உள்பட சிலரை கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த டிச.15ல் தொட்டணம்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த மல்லீஸ்முருகன் 27, அவரது தந்தை கிருஷ்ணன் 50, உறவினர் மார்நாட்டன் 50, ஆகியோரை இருசக்கர வாகனங்களில் வந்த கும்பல் வெட்டிக் கொல்ல முயன்றது. இதில் மல்லீஸ்முருகன் தப்பிக்க மற்ற இருவரும் வெட்டுக் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள் ளனர் .

மஞ்சுளா கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க, அவரது மகன் நல்லமுனியப்பன் 23, கோவை சோமனுார் சரவணக்குமார் 22, உறவினர் மாயப்பன் ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மூவரையும் எரியோடு போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X