சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணக்கெடுப்பு: வன ஊழியர் உட்பட இருவர், யானை தாக்கி பலி

Added : டிச 18, 2020
Share
Advertisement
சத்தியமங்கலம்:வனவிலங்குகள் கணக்கெடுப்பில், வன ஊழியர் உட்பட இருவர், யானை தாக்கி பலியாயினர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.விளாமுண்டி வனச்சரகம், கல்லாம்பாளையம் வனப்பகுதியில், மாயாற்றின் தென்பகுதியில் வன காப்பாளர் பொன் கணேசன், 40, தலைமையில் வனக்காவலர் சதீஷ்குமார், 25, வேட்டை தடுப்பு காவலர் மற்றும்

சத்தியமங்கலம்:வனவிலங்குகள் கணக்கெடுப்பில், வன ஊழியர் உட்பட இருவர், யானை தாக்கி பலியாயினர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனவிலங்கு கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.விளாமுண்டி வனச்சரகம், கல்லாம்பாளையம் வனப்பகுதியில், மாயாற்றின் தென்பகுதியில் வன காப்பாளர் பொன் கணேசன், 40, தலைமையில் வனக்காவலர் சதீஷ்குமார், 25, வேட்டை தடுப்பு காவலர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

அப்போது யானை தாக்கியதில் வனக்காவலர் சதீஷ்குமார் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற வனக்காப்பாளர் பொன் கணேசனும் படுகாயம் அடைந்தார். வன ஊழியர்கள் தப்பியோடி, கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி மறைந்தனர். அப்போது, துாத்துக்குடியை சேர்ந்த தன்னார்வலர் பிரபாகரன், 26, என்பவரை யானை மிதித்துக் கொன்றது. காயமடைந்த பொன் கணேசனை மீட்டு, சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X