திண்டுக்கல் : 'முதல்வர் பழனிசாமி அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நிறைவேற்றியவர்' என, திண்டுக்கல்லில் அமைச்சர் சீனிவாசன் பேசினார்.
திண்டுக்கல் நாகல்நகர், செட்டிநாயக்கன்பட்டி உட்பட 3 பகுதிகளில் 'அம்மா மினி கிளினிக்'கை துவக்கி வைத்து, அமைச்சர் பேசியதாவது:முதல்வர் பழனிசாமி மருத்துவ சிகிச்சையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக தமிழகத்தை மாற்றியுள்ளார். திண்டுக்கல்லில் 80 சதவீத குழந்தைகள் அரசு மருத்துவமனையில் பிறக்கின்றன. ஒரே ஆண்டில் திண்டுக்கல் உட்பட 11 இடங்களில் மருத்துவ கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம் செலுத்த முடியாத அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச 'நீட்' பயிற்சி வழங்கி, மருத்துவ கனவை முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.இருக்கும் இடத்திலேயே ஏழைகள் சிகிச்சை பெற 'அம்மா மினி கிளினிக்' துவங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் ஒரு கிளினிக் வீதம் 42 கிளினிக்குகள் செயல்பட உள்ளது. காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 4:00 முதல் இரவு 8:00 மணி வரை செயல்படும்.
காய்ச்சல், ரத்த அழுத்தம், சிறுநீர், மகப்பேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். ரூ.200 செலுத்தி சிகிச்சை பெறும் கஷ்டம் இருக்க கூடாது என்பதற்காக இந்த கிளினிக்குள் துவங்கப்பட்டுள்ளன, என்றார். சுகாதாரத்துறை இணை இயக்குனர் சிவக்குமார், துணை இயக்குனர்கள் நளினி, ஜெயந்தி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் மருதராஜ், தேன்மொழி எம்.எல்.ஏ., நகர்நல அலுவலர் லட்சிய வர்ணா, மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராஜசேகரன், செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் லதா, தொழிலதிபர் தர்மராஜ், கிளார்க் மாரிமுத்து பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE