திண்டுக்கல் : திண்டுக்கல்லில் சட்டசபை பொதுக் கணக்குகுழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். இதில் குழுவின் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் கூறியதாவது: சட்டசபையில் ஒவ்வொரு மானிய கோரிக்கையின் போது அனைத்து துறைகளுக்கும் போதுமான அளவு நிதி ஒதுக்கப்படுகிறது. அவ்வாறு ஒதுக்கும் நிதி சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்கப்பட்டு, முழுமையாக செலவு செய்யப்பட்டுள்ளதா, தவறுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய பொது கணக்குக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது, என்றார்.
மேலும் துறை ரீதியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.இதையடுத்து குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், நடராஜ், பழனிவேல் தியாகராஜன், ராஜா ஆகியோர் சென்னமநாயக்கன்பட்டியில் கள்ளர் மேல்நிலை பள்ளியில் நபார்டு திட்டத்தில் ரூ.1.06 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம், ஆய்வகம், கழிப்பறையை ஆய்வு செய்தனர். வேலுச்சாமி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் சக்கரபாணி, ஆண்டிஅம்பலம், செந்தில்குமார், டி.ஆர்.ஓ., கோவிந்தராசு உடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE