பீஜிங்:நிலவில் இருந்து கல் மண் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்து கொண்டு சீனாவின் 'சாங்கி 5' விண்கலம் வெற்றிகரமாக பூமியை அடைந்தது.
நிலவில் இருந்து கல் மண் உள்ளிட்ட மாதிரிகளை பூமிக்கு எடுத்து வந்து ஆய்வு செய்யும் பணியினை அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் ஏற்கனவே வெற்றிகரமாக செய்துள்ளன.இந்த வரிசையில் மூன்றாவது நாடாக சீனா உருவெடுத்துள்ளது. நிலவில் இருந்து மாதிரிகளை எடுத்து வருவதற்காக சீனா 'சாங்கி 5' என்ற விண்கலத்தை கடந்த மாதம் 24ல் விண்ணில் ஏவியது.
நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய விண்கலம் அங்கிருந்து கல் மண் உள்ளிட்ட மாதிரிகளை சேகரித்துக் கொண்டு பூமியை வந்தடைந்தது.வட சீனாவின் மங்கோலிய தன்னாட்சி பகுதியில் அமைந்துள்ள சிஸிவாங் பானர் என்ற இடத்தில்விண்கலம் தரை இறங்கியது.இதையடுத்து சாங்கி 5 திட்டம் வெற்றி பெற்றுள்ளதாக சி.என்.எஸ்.ஏ. எனப்படும் சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சீன அதிபர் ஷீ ஜிங்பிங் கூறியதாவது:சாங்கி 5 திட்டத்தை வெற்றி பெற செய்த விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள். நிலவின் தோற்றம் மற்றும் சூரிய குடும்பத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆழமாக அறிய இந்த ஆராய்ச்சி பேருதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE