திண்டுக்கல் :'பழநி கோயிலில் தரமான பிரசாதம் வழங்கப்படுகிறதா' என, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ஹிந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வருவாயை பொறுத்து மதியம் அன்னதானம், திருவிழாக்களின் போது பிரசாதம் வழங்கப்படுகிறது.மார்கழி மாதத்தில் கோயில்களில் அதிகாலையில் சிறப்பு பூஜைகள் நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவது வழக்கம். இதையடுத்து பிரசாதம், அன்னதானத்தின் தரம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.+
அதன்படி பிரசாதம் தரமான பொருட்களில், சுகாதாரமாக தயாரிக்க வேண்டும். செயற்கை வண்ணம், சுவையூட்டி சேர்க்க கூடாது. பிரசாதம் தயாரிப்பவர் நோய் பாதித்தவராக இருக்க கூடாது. தயாரிப்பின் போது தலை, கைகளில் உறை அணிந்திருக்க வேண்டும்.
பழநியில் ஆய்வு
நியமன அலுவலர் ஜெயராம பாண்டியன் கூறியது: மார்கழியில் கோயிலுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பிரசாதம் தரமானதாக இருக்க வேண்டும். நேற்று முன்தினம் பழநி கோயில் அன்னதானம், ஸ்டாலில் விற்கப்படும் பிரசாதத்தின் தரம் ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் மத்திய அரசின் தர சான்றிதழ் வழங்கப்பட உள்ளது' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE