கொரோனாவால் கடந்த மார்ச் முதல் பள்ளிகள் மூடிக்கிடக்கின்றன. தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு 'ஆன்லைன்' வாயிலாக பாடம் கற்பிக்கின்றனர். மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ.,) பாடத்திட்டத்தை பின்பற்றும் மாணவர்களுக்கு கல்வியாண்டின் துவக்கத்திலேயே குறைக்கப்பட்ட பாடத்திட்டம் (சிலபஸ்) வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் இன்னும் திறக்கப்படாததால் 9 ம் வகுப்பு வரை 50 சதவீத பாடங்கள் நடப்பு கல்வியாண்டில் குறைக்கப்பட்டுள்ளன. இதேபோன்று 10,11,12 ம் வகுப்புகளுக்கு 35 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்காக, அமைக்கப்பட்ட பாடத்திட்ட குறைப்பு குழு சமர்பித்த அறிக்கை குறித்து, இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.
அதனால் பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குறைக்கப்பட்ட பகுதிகள் எது என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். இனியும் அறிவிப்பு வெளியிட தாமதித்தால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுவர். எனவே, விரைவில் குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து அறிக்கை வெளியிட வேண்டும்.
குறைக்கப்பட்ட பாடத்திற்கு ஏற்ப, வினா வங்கியும் வெளியிட வேண்டும். இது கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பள்ளிகள் திறப்பு, பொதுத்தேர்வு நடத்த உள்ள உத்தேச காலம் குறித்தும் அரசு அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE