கொடைக்கானல் : கொடைக்கானலில் சாரலால் கடுங்குளிர் நிலவுகிறது.
வளிமண்டல மேலடுக்கால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இரு தினங்களாக மிதமான மழை பெய்கிறது. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து பகலில் கடுங்குளிர் நிலவும் நிலையில் தீ மூட்டி குளிரை சமாளித்தனர்.தற்போதைய சீதோஷ்ண நிலையால் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக உள்ளது. தரையிறங்கிய மேகக்கூட்டத்தால் பனி மூட்டம் நிலவி வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டுச் சென்றன. குளிரைத் தாங்கும் ஆயத்த ஆடைகளை அணிந்தே பொதுமக்கள் நடமாடினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE