திருமங்கலம்:''எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் மத்திய சுகாதாரத்துறையிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தவறான தகவலை தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பரப்புகிறார்,'' என மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலுாரில் அம்மா மினி கிளினிக்கை திறந்து அமைச்சர் உதயகுமார் பேசினார்.
அவர் பேசியதாவது: தோப்பூரில் எய்ம்ஸ் அமையும் பகுதியில் நான்குவழிச்சாலை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை யாராவது ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்டு மக்களை குழப்புகின்றனர். எய்ம்சுக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கவில்லை என கூறுகின்றனர். நிலம் கொடுக்கப்பட்டு விட்டது.
காசநோய் மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தை வருவாய்த்துறைக்கு மாற்றி மத்திய சுகாதாரத் துறையிடம் ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. அதற்கான முழு முன்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. முன் வடிவம் கொடுக்கப்பட்டதால் தான் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒப்பந்தம் தள்ளிப்போயிருக்கிறது. எய்ம்ஸ் தொடர்பான வருவாய்த்துறை ஆவணம் தயார் நிலையில் உள்ளது. யார் வேண்டுமானாலும் பார்க்கலாம், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE