சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனவிலங்கு கணக்கெடுப்பு பணி துவங்கியது. மாயாற்றின் தென்பகுதியில் வன காப்பாளர் பொன் கணேசன், 40, தலைமையில் வனக்காவலர் சதீஷ்குமார், 25, வேட்டை தடுப்பு காவலர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, புதர் மறைவில் இருந்த யானை, வனக்காவலர் சதீஷ்குமாரை, தும்பிக்கையால் பிடித்து, காலால் மிதித்து கொன்றது. வனக்காப்பாளர் பொன் கணேசனை தாக்கியதில், அவர் படுகாயம் அடைந்தார்.வன ஊழியர்கள் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி மறைந்தனர். அப்போது, துாத்துக்குடியை சேர்ந்த தன்னார்வலர் பிரபாகரன், 26, என்பவரை யானை மிதித்துக் கொன்றது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE