கிளப்புறாங்கய்யா...:உலகம்

Added : டிச 18, 2020
Share
Advertisement
கொரோனா விழிப்புணர்வுகொரோனா பரவலை, சமூக இடைவெளி மட்டுமல்லாது, முக கவசம் அணிவதாலும் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெலிவியா நாட்டில் முக கவசம் மற்றும், 'பேஸ் ஷீல்டு' சாதனம் அணிவிக்கப்பட்டு, வித்தியாசமான குழந்தை ஏசு சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருப்பதையொட்டி, பிரார்த்தனைக்காக குழந்தை ஏசு சிலைகள் அதிகம்

கொரோனா விழிப்புணர்வு

கொரோனா பரவலை, சமூக இடைவெளி மட்டுமல்லாது, முக கவசம் அணிவதாலும் தவிர்க்கலாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. பெலிவியா நாட்டில் முக கவசம் மற்றும், 'பேஸ் ஷீல்டு' சாதனம் அணிவிக்கப்பட்டு, வித்தியாசமான குழந்தை ஏசு சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. விரைவில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட இருப்பதையொட்டி, பிரார்த்தனைக்காக குழந்தை ஏசு சிலைகள் அதிகம் வாங்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு, புதிய வகை சிலைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

கங்காரு ரொம்ப ஜோரு!

பொதுவாக நாய், பூனை, குதிரை, மாடு போன்ற வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள், மனிதர்களுடன் உரையாடும் ஆற்றல் பெற்றவை என்ற வரிசையில் தற்போது கங்காருவும் இணைந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் விலங்கான கங்காருவுக்கு மனிதர்களுடன் உரையாடும் ஆற்றல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாய்களை போலவே, அவை விழி அசைவை புரிந்துகொள்வதாக கூறப்படுகிறது.

இசையும் மருந்தாகும்!

கிரீஸ் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை உற்சாகப்படுத்த வீதி நாடக கலைஞர்களின் இசைக்குழுவுடன் மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் இணைந்துள்ளனர். ஏழு நபர்களை கொண்ட ரோம்வோஸ் என்ற பேண்டு வாத்திய குழு மருத்துவமனைகளின் வெளியில் இசைக்கருவிகளை இசைத்தும், பாடல்களை பாடியும் நோயாளிகளை மகிழ்வித்தனர். மருத்துவ பணியிலும் சேவையிலும் உள்ளவர்களின் மன அழுத்தத்தை போக்கவும் இந்த முயற்சி உதவுவதாக கருதப்படுகிறது.

கரடிகள் இடமாற்றம்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உயிரியல் பூங்காவில் இருந்து, உலகின் தனிமையான யானை இடம் மாற்றப்பட்டதை அடுத்து, அங்கிருந்த இரண்டு நடனமாடும் கரடிகளும் இடமாற்ற பட்டுள்ளன. விலங்குகளுக்கு உரிய பராமரிப்பு இல்லை என அமெரிக்க பாப் நட்சத்திரம் செர் உள்ளிட்ட சிலர் தொடுத்த வழக்கையடுத்து, அந்த விலங்கு பூங்காவை மூட, நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடைசி விலங்குகளான, சூசி, பப்லு என்ற இந்த இரண்டு இமயமலை கரடிகளும் ஜோர்டனுக்கு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X