கோவை:கோவையில் மீட்கப்பட்ட அரிய வகை எகிப்தியன் பிணந்தின்னி கழுகு, முதலுதவி சிகிச்சைக்கு பிறகு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பகம், மாயாறு பள்ளத்தாக்கில், எகிப்தியன் பிணந்தின்னி கழுகுகள் அதிகம் காணப்படுகின்றன. அழிவின் பட்டியலில் உள்ள இந்த கழுகு வகையை காக்க வனத்துறையினரும், ஆராய்ச்சியாளர்களும் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
கோவை சூலுாரில், இறக்கையில் எலும்பு முறிவுடன் தென்பட்ட எகிப்தியன் பிணந்தின்னி கழுகை மாணவர் ஒருவர் மீட்டு, கொங்குநாடு கலை கல்லுாரி பேராசிரியர் வெங்கிடாசலமிடம் ஒப்படைத்தார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு கோவை வனத்துறையினரிடம் கழுகு ஒப்படைக்கப்பட்டது.
பேராசிரியர் வெங்கிடாசலம் கூறுகையில், ''மலைமுகடுகளில் எகிப்தியன் பிணந்தின்னி கழுகுகள் அதிகம் வாழுகின்றன. முன்பு இவை கோழிக்கழிவு, தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடங்களில் கழிவுகளை தின்று, மனிதர்களுக்கு நோய் பரவாது உதவியாக இருந்தன. தற்போது, இந்த வகை கழுகுகள் அழிவின் பட்டியலில் உள்ளன,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE