பாட்னா: வரப்போகும் மேற்குவங்க சட்டசபை தேர்தலில் 75 தொகுதிகளில் போட்டியிட பீஹாரின் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்தாண்டு ஏப்ரல் - மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மேற்குவங்கத்தில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திரிணாமுல் காங்.கும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜ.வும் தீவிரம் காட்டி வருகின்றன.
![]()
|
இந்த சூழ்நிலையில் பீஹார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மேற்குவங்க மாநிலத்தில் 75 தொகுதிகளின் போட்டியிட திட்டமிட்டுள்ளது.
இக்கட்சி மேற்குவங்க மாநில தலைவர் குலாம் ரசூல் கூறியது, இம்மாநிலத்தில் சிலிகுரி, முர்ஷிதாபாத், மால்டா,தினாஜ்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு ஓட்டு வங்கி உள்ளது. இம்மாவட்டங்களில் 75 தொகுதிகளில் போட்டியிட நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். தேர்தல் தேதி அறிவித்தவுடன் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE