கேரளாவில் பா.ஜ., வளர்ச்சி அண்ணாமலை கருத்து| Dinamalar

கேரளாவில் பா.ஜ., வளர்ச்சி அண்ணாமலை கருத்து

Added : டிச 18, 2020
Share
திருப்பூர்:''கேரளாவில் பா.ஜ., காலுான்றி வளர்ந்து வருகிறது,'' என்று, பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில், 'விவசாயி நண்பன் மோடி' என்னும் நிகழ்ச்சி காங்கயத்தில் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற மாநில துணை தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு எதுவும் இல்லை. பாலக்காடு,

திருப்பூர்:''கேரளாவில் பா.ஜ., காலுான்றி வளர்ந்து வருகிறது,'' என்று, பா.ஜ., துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்ட பா.ஜ., சார்பில், 'விவசாயி நண்பன் மோடி' என்னும் நிகழ்ச்சி காங்கயத்தில் நேற்று நடந்தது. அதில், பங்கேற்ற மாநில துணை தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:கேரள மாநில உள்ளாட்சி தேர்தலில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு எதுவும் இல்லை. பாலக்காடு, கண்ணுாரில் வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலத்தில், பா.ஜ., காலுான்றி வளர்ந்து வருகிறது. விவசாயிகள் பஞ்சாப், ஹரியானா தவிர மற்ற இடத்தில் போராட்டம் நடத்தவில்லை.

காங்., பொய் பிரசாரம் செய்து துாண்டி விட்டு இருக்கலாம். முக்கியமான விவசாய சங்கங்கள், தற்போது அரசுக்கு ஆதரவு தெரிவித்து, வெளியே வந்து கொண்டுள்ளனர். எதிர்கட்சியினர், விவசாயிகளை வாக்கு வங்கியாக பார்க்கின்றனர். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து கருத்து சொல்ல எனக்கு தகுதி கிடையாது. கட்சி ஆரம்பிக்கட்டும்; அப்புறம் பேசுகிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X